லியோ செகண்ட் சிங்கிளும் காப்பியா? – துவம்சம் செய்யும் மீம் கிரியேட்டர்ஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதற்கிடையே, இப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இதுதொடர்பான புரோமோ வீடியோவை, நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இது வின்னர் படத்தில் இடம்பெற்ற பின்னணி இசை போலவே உள்ளது என்று கலாய்த்து வருகின்றனர்.

அதாவது, கைப்புள்ள கதாபாத்திரம், கட்டதுரையை சந்திக்க செல்லும்போது, வேணா வலிக்குது என்ற வசனத்தை, நடிகர் வடிவேலு பேசியிருப்பார்.

அப்போது, அந்த காட்சியில், ஒரு பின்னணி இசை சேர்க்கப்பட்டிருக்கும். அந்த இசையை பட்டி டிங்கரிங் செய்து தான், லியோ செகண்ட் சிங்கிள் உருவாக்கப்பட்டுள்ளதாக, மீம் கிரியேட்டர்கள், கலாய்த்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News