Connect with us
Raj News Tamil

Raj News Tamil

சந்திரமுகி2 படத்தின் முதல் நாள் வசூல்..!

சினிமா

சந்திரமுகி2 படத்தின் முதல் நாள் வசூல்..!

பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரணவாத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சந்திரமுகி2.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், ரஜினியின் சந்திரமுகி போன்று ஆஹா ஓஹோ என்றெல்லாம் இல்லையாம். இப்படம், ஆவேரேஜ் படம் தான் என்று மக்கள் கருத்து கூறிவருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளிவந்துள்ளது. இந்திய அளவில் 7.5 கோடி ரூபாயும், தமிழ்நாட்டில் 4.5 கோடி ரூபாயும் வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. மோசமான விமர்சனங்களை பெற்றாலும் தொடர் விடுமுறை என்பதால், சந்திரமுகி2-ன் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

குறைந்தது, படத்தின் பட்ஜெட்டானா 60 கோடி ரூபாய் வசூலானால் போதும் என்ற மனநிலையில் தான் படக்குழு இருப்பதாக தெரிகிறது.

More in சினிமா

To Top