சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட கர்நாடக சூப்பர் ஸ்டார்!

தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நதிநீர் தொடர்பாக, நீண்ட நாட்களாக பிரச்சனை உள்ளது. இதனை சரி செய்வதற்காக, காவிரி ஒழுங்கு ஆணையம் உருவாக்கியும், எந்தவொரு தீர்வும் கிடைக்காமல் உள்ளது.

இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில், காவிரி பிரச்சனை தொடர்பாக, பந்த் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சித்தார்த், தனது சித்தா படத்தை புரமோஷன் செய்ய, கர்நாடக மாநிலத்திற்கு சென்றிருந்தார்.

அங்கு, பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த காவிரி போராட்ட அமைப்பினர் சிலர், அந்த செய்தியாளர்கள் சந்திப்பை நிறுத்துமாறு முற்றுகையிட்டனர்.

இதனால், அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, அங்கிருந்து சித்தார்த் கிளம்பிச் சென்றார். இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுதொடர்பாக, நடிகர் சிவராஜ் குமார் பேசியுள்ளார்.

அதில், கன்னட திரையுலகினர் சார்பில் நடிகர் சித்தார்த் இடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற தவறு இனி நடக்காது. கனடா மக்கள் நல்ல மக்கள். அனைத்து மொழி படங்களையும் விரும்பி பார்ப்பவர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் பிரச்சனையில் தமிழகம் மற்றும் கர்நாடக அரசியல்வாதிகள் மத்தியில் கருத்து வேறுபாடு இருந்தாலும், இரு மாநிலத் திரையுலகினர்கள் ஒற்றுமையாக இருப்பது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News