இனி உபயோகப்படுத்தலாம் 2000 ரூபாய் நோட்டுகள்! குஷியில் பொதுமக்கள்!

நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே 19ம் தேதி அறிவித்தது. மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதி வரை மாற்றிக் கொள்ளவும் அவகாசம் அளிக்கப்பட்டது.

அதோடு, ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் கூறியிருக்கிறது.

இதனிடையே 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2000 ரூபாய் தாள்களை மாற்றுவது அல்லது வங்கி கணக்குகளை திரும்ப செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் 2 ஆயிரம் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

RELATED ARTICLES

Recent News