லியோ திரைப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம், பெரும் வெற்றியை பெறும் என்று, ரசிகர்கள் பலரும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று, இடம்பெற்றுள்ளது. அதாவது, இப்படத்தில் சிங்கம் ஒன்று வி.எப்.எக்ஸ் மூலம், உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இந்த சிங்கம், எதிரிகளிடம் இருந்து தப்பிக்க, விஜய்-க்கு உதவுவது போலவும், காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.
எனவே, அந்த காட்சிகள் அனைத்தும், திரையரங்கில் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.