பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் அருண்குமார்.
இவர், தற்போது சித்தார்த்தை வைத்து, சித்தா என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி அன்று வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் உலகம் முழுவதும், ரூபாய் 11.5 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம், வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.