அதிமுக- பாஜக மறைமுக கூட்டணியா?

கோவையில் அதிமுக எம்எல்ஏக்கள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினர்.

அதிமுக, பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக கடந்த மாதம் அறிவித்திருந்தது.

பாஜக உடனான கூட்டணி முறிவு என்பது பொதுச்செயலாளரின் முடிவு அல்ல, தொண்டர்களின் முடிவு என எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தெரிவித்தார்.

இந்த நிலையில், கோவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். உடன் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உடனிருந்தார்.

அதிமுக, பாஜகவுடான கூட்டணி விலகியதாக அறிவித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்கங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News