நேபாளத்தின் மேற்கு பகுதிகளில் இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டதை தொடா்ந்து ,மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.முதல் இரண்டு
நிலநடுக்கம் 5.3 மற்றும், 6.3 என்று பதிவானது.
இந்நிலையில் மூன்றாவது நிலநடுக்கம் 4.1 என்று ரிக்டா் அளவுகோளில் பதிவாகியுள்ளது. இதன் உணா்வுகள் இந்தியாவிலும் உணரப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதனால், நெடுஞ்சாலையில் போக்குவரத்து நொிசல் ஏற்பட்டது, மேலும் 5 போ் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
நிலநடுக்கம் குறித்து பேசிய உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹெச்.என்.பி. பல்கலைகழகத்தின் புவியியல் பேராசிாியா்மகாவீா் நெகி .இந்த சிறிய நிலநடுக்கம் பொிய அளவில் நிலநடுக்கம் ஏற்படுத்துவதை உணா்த்துகின்றன ,இதோடு நிலநடுகத்தை தாங்கும் அளவிற்கு கட்டிடங்கள் இருக்க வேண்டும் என்று எச்சாிக்கை விடுத்துள்ளாா்