அரசு நடத்தும் உடற்கல்வி நிறுவனத்தில் உணவு சாப்பிட்ட சுமார் 100 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனத்தில் பரிமாறப்பட்ட பன்னீர் சப்ஜி உணவால் சுமார் 100 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் உணவு விஷமாகியிருக்கலாம் என தெரிவித்தனர்.