2009-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த நபர்களுக்கு சிகரெட் விற்பனை செய்ய கூடாது என்ற சட்டம், இங்கிலாந்து நாட்டில் அமலுக்கு வந்துள்ளது.
சிகரெட் பிடிப்பதால், பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில், பதின் பருவத்தினரே, இந்த பழக்கத்திற்கு ஆளாகி, தங்களது வாழ்க்கையையும், உடல்நலத்தையும் கெடுத்து கொள்கின்றனர்.
எனவே, இந்த சிகரெட்டை தடை செய்ய வேண்டும் என்று, உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இவ்வாறு இருக்க, இங்கிலாந்து நாட்டில், 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு, சிகரெட் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த தடை தொடர்ச்சியாக நடந்து, 2040-ஆம் ஆண்டுக்குள், இளைய தலைமுறையினர் முழுவதும், இந்த சிகரெட் பழக்கத்தில் இருந்து விடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது,
“எந்த பெற்றோரும், தங்களது குழந்தை சிகரெட் புகைப்பதை விரும்பவில்லை. இந்த கொடிய பழக்கம், ஒவ்வொரு ஆண்டும், பல்லாயிரக் கனக்கானவர்களை கொல்கிறது.
நான் நமது குழந்தைகளுக்காக, சிறந்த மற்றும் ஒளிமயமான நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நினைக்கிறேன்.
அதனால், இந்த பழக்கத்தை அனைவரும் கைவிட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த புதிய மாற்றம், நம் குழந்தைகள் சிகரெட் புகைப்பதை நிச்சயம் தடுக்கும் என்று நினைக்கிறேன்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.