லியோ படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள், கொண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த டிரைலரை ரிப்பீட் மோடில் பார்த்து வரும் சில தீவிர ரசிகர்கள், படத்தின் கதை இதுவாக இருக்கலாம் என்று சில யூகங்களை கூறி வருகின்றனர். அதன்படி, லியோ, ஆண்டனி தாஸின் கேங்கில் இருக்கிறார்.
ஒரு நாள், அவர் ஆண்டனி தாஸின் மகனான சாண்டியை கொலை செய்துவிடுகிறார். இதனால், அவரை பழிவாங்குவதற்கு ஆண்டனி தாஸின் கேங், முயற்சி செய்கிறது. பின்னர், அவருக்கு தலையில் அடிப்பட்டு பழைய சம்பவங்கள் அனைத்தையும் மறந்து, பார்த்திபன் என்ற பெயரில் புதிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
ஒரு கட்டத்தில், லியோ இருக்கும் இடத்தை அறிந்த ஆண்டனி தாஸின் கேங், மீண்டும் அவரை கொல்ல முயற்சி செய்கிறது. ஆனால், பழையதை மறந்த லியோ, குழப்பத்துடன் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடுகிறார்.
ஒரு கட்டத்தில், தான் யார் என்பதை அறிந்த பார்த்திபன், லியோவாக மாறி, எதிரிகளை சூறையாடுவது தான், கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது பழைய கதையாக இருந்தாலும், தனது அற்புதமான திரைக்கதையால், படத்தை சுவாரசியமாக லோகேஷ் கனகராஜ் மாற்றிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.