கோச்சிங் கிளாஸ் நடத்திய ஆசிரியை.. துப்பாக்கியால் சுட்ட 2 மாணவர்கள்..!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியில் சுமித் என்ற பெண், பள்ளி ஒன்றில், ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் இதுமட்டுமின்றி, தனியாக மாணவர்களுக்கான கோச்சிங் சென்டர் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இந்த கோச்சிங் சென்டரில் படித்து வந்த இரண்டு மாணவர்கள், ஆசிரியை சுமித்தை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த விசாரணையில், ஆசிரியை சுமித் நடத்தி வந்த கோச்சிங் சென்டரில், அவரது சகோதரர் ஒருவரும் படித்து வந்துள்ளார். அப்போது, அவருக்கும், அந்த இரண்டு மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறின் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தால், ஆசிரியை சுமித்தை, மாணவர்கள் சுட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, அந்த சம்பவம் நடந்தபோது, மாணவர்கள் எடுத்து வீடியோ ஒன்றும், இணையத்தில் வெளியாகி, நெட்டிசன்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அந்த வீடியோவில், “உன் மீது 40 தோட்டாக்களை சுடுவதற்கு முடிவு செய்துள்ளேன். இப்போது, இந்த ஒரு தோட்டாவை வைத்துக் கொள். மீதமுள்ள 39 தோட்டாக்களும், அடுத்த 6 மாதங்களுக்குள் உன்னை சேரும்.” என்று 2 மாணவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News