பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.
பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நிகழாண்டின் 2-ஆம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கூடியுள்ளது.
இந்த நிலையில் காவிரி தொடர்பான அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிகிறார். காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தி இத்தீர்மானத்தை முதல்வர் கொண்டு வருகிறார்.
எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை குறித்து பேரவைத் தலைவரிடம் அதிமுக ஏற்கெனவே மனு அளித்துள்ளது. இதுபற்றி பேரவையில் அதிமுக மீண்டும் கேள்வி எழுப்பும் என்று தெரிகிறது.
இந்த கூட்டத்தொடர் மூன்று நாள்கள் நடத்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.