ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அன்று வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. டைம் ட்ராவெலிங்கை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட
இந்த திரைப்படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூல் பெற்றது. இதுவரை விஷால் நடித்த படங்கங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக மார்க் ஆண்டனி உள்ளது.
இந்நிலையில் இப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளன. அதாவது, மார்க் ஆன்டனி திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓ.டி.டி. தளத்தில் வரும் 13ஆம் தேதி அன்று வெளியாகயுள்ளது.
விஷாலுக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இப்படம் மாபெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.