Connect with us

RajNewsTamil

ரசிகர்களுடன் சூப்பர்ஸ்டார்! – வைரலாகும் வீடியோ!

சினிமா

ரசிகர்களுடன் சூப்பர்ஸ்டார்! – வைரலாகும் வீடியோ!

டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி தனது 170வது படத்தில் நடிக்கவுள்ளார். கடந்த 4-ம் தேதி பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின், முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, திருநெல்வேலி பணகுடி மற்றும் அருகே உள்ள ஆரல்வாய்மொழி பகுதிகளில் 3 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பிற்கு ரஜினி வருவார் என்ற தகவல் வெளியானது.

இதனை அறிந்த ரசிகர்கள், படப்பிடிப்பு நடைபெறும் இடமான பணகுடிக்கு ரஜினியை காண வந்திருந்தனர். அங்கு கூடிய ரசிகர்களுக்கு, ரஜினிகாந்த் கைகொடுத்து உற்சாகப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top