“எங்கள் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இல்லை” – அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நன்டெட் பகுதியில் ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில், செப்டம்பர் மாத இறுதியில் இருந்து அக்டோபர் மாத தொடக்கம் முதல், 31 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

மேலும், கடந்த 8 நாட்களில் 108 பேர் உயிரிழந்தாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. இந்த உயிரிழப்புகள் அனைத்தும், மருந்துப் பற்றாக்குறை காரணமாக தான் நடந்தது என்றும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்களுக்கு அந்த மருத்துவமனையின் டீன் ஷ்யாம் வாக்கோடு, விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“ கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 100 நோயாளிகளுக்கு, மருத்துவர்களால் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது மற்றும் 191 புதிய நோயாளிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா.

ஒரு நாளைக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை முன்பு 13-ஆக இருந்தது. ஆனால், தற்போது, அந்த எண்ணிக்கை 11-ஆக குறைந்துள்ளது. மேலும், எங்களிடம் தேவையான அளவு மருந்துகள் இருப்பில் உள்ளது மற்றும் எங்கள் மருத்துவமனையின் மருத்துவர்கள் அனைத்து நோயாளிகளுக்கும் உதவி செய்கிறார்கள்.”

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் உள்ள மருந்துகளின் இருப்பு தொடர்பாக, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், “எங்களது பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு, நாங்கள் 3 மாதங்களுக்கு தேவையான மருந்துக்களை இருப்பில் வைத்துக் கொள்வோம்.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், நோயின் மோசமான நிலையால் தான் உயிரிழந்தார்களே தவிர, மருந்து தட்டுப்பாட்டால் அல்ல” என்றும் கூறினார்.

நண்டட் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக, காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அசோக் சவான், கடந்த செவ்வாய் கிழமை அன்று, கூறியிருந்தார்.

மேலும், தீவிர சிகிச்சை பிரிவில், 60 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும், ஆனால், அந்த குழந்தைகளை கவனிக்க வெறும் 3 செவிலியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர் என்றும், அவர் கூறியிருந்தார்.

இதேபோன்று, நண்டட் மாவட்டத்தில் உள்ள போகர் தொகுதியின் எம்.எல்.ஏவும், இதே குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News