சீனாவின் ஹாங்சோ நகரில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.அதன்படி, இந்தியா முதல் முறையாக 28 தங்கம் உட்பட 107 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், பதக்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டு வீரர்களுடன் கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினரும் கலந்துகொண்டனர். அப்போது, ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்துகொண்ட இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட், அணி வீரர்கள் இணைந்து கையெழுத்திட்ட பேட்டும், ஜெர்சியையும் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார்.