ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று, பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம்.
ஆனால், இந்த முறை, பெரிய எதிர்பார்ப்புள்ள திரைப்படங்கள் தான், திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அதாவது, கார்த்தி நடிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜப்பான் படமும், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஜிகர்தண்டா 2-ஆம் பாகமும், தீபாவளி பண்டிகை அன்று வெளியாக உள்ளது.
இவ்வாறு இருக்க, இந்த தீபாவளி ரேஸில், இன்னொரு திரைப்படம் இணைந்துள்ளது. அதாவது, கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் உருவான தகறு என்ற திரைப்படத்தின் ரீமேக், ரெய்டு என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது.
விக்ரம் பிரபு, ஸ்ரீ -திவ்யா ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படமும், தீபாவளி ரேஸில் இணைந்துள்ளது.
