தமிழ்நாட்டில் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் துவங்கப்பட்டு 187-ஆண்டு ஆகிறது. ஆங்கிலத்தில் மருத்துவம் கற்பிக்கப்பட்டு வந்த நிலையில், தமிழில் பயிலவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் பவள விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது தாய்மொழியில் உயர்கல்வி படிப்புகளை படிக்க தமிழக அரசு தெரிவித்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்புரமணி,தமிழ் வழியில் மருத்துவம் படிக்க கடந்த வருடமே தமிழக அரசு முடிவெடுத்துவிட்டது என்றார். மேலும் இதற்கான மொழிபெயர்ப்பு வேலைகள் முடிவடைந்து புத்தகம் வெளியிட தயார் நிலையில் உள்ளது என்று பதிலடி கொடுத்துள்ளார்.