ஏக்நாத் ஷிண்டே தகுதி நீக்க வழக்கு – கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்!

மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற்ற சிவசேனா கட்சி, காங்கிரஸ் கட்சியின் கூட்டணியை வைத்து, ஆட்சியை பிடித்தது.

ஆனால், சில மாதங்களுக்கு பிறகு, சிவசேனா கட்சியில் இருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே, தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் உதவியுடனும், பாஜகவின் கூட்டணியுடனும், ஆட்சியை பிடித்தார்.

இந்த சம்பவம், இந்திய அரசியல் உலகில், பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்க வலியுறுத்தி, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை, இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனை விசாரித்த நீதிபதி DY சந்திரசூட், மகாராஷ்டிரா மாநிலத்தின் சபாநாயகரை கடுமையாக விமர்சித்தார்.

மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தன்னால் மாற்ற முடியாது என்று, அந்த சபாநாயகரிடம் யாராவது சொல்லுங்கள் என்றும் அவர் கடிந்துக் கொண்டார்.

மேலும், இந்த பிரச்சனை தொடர்பாக முடிவு எடுப்பதற்கு எவ்வளவு நாட்கள் தேவை என்பதை, சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா கூற வேண்டும் என்றும், நீதிபதி தெரிவித்தார்.

மேலும், இந்த தகுதி நீக்க மனு தொடர்பாக, சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும், இல்லை என்றால், இந்த முடிவு எடுக்கப்பட்டதே வீண் என்றும் அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News