காசாவிலிருந்து 24 மணி நேரத்தில்; 10 லட்சம் மக்கள் வெளியேற வேண்டும்: இஸ்ரேல் எச்சரிக்கை!

காசாவின் வடக்குப் பகுதியில் இருந்து 10 லட்சம் மக்களை வெளியேற்றும்படி ஐ.நா. மூலம் ஹமாஸ் குழுவுக்கு இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

24 மணி நேரத்தில் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படாவிட்டால் தரைவழித் தாக்குதலில் மோசமாக பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேல் எச்சரித்தது.

இது தொடர்பாக ஐ.நா., மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது:

காசாநகர மக்கள் 10 லட்சம் பேர் மாற்று இடங்களை நோக்கி நகருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் இது போன்ற நகர்வு நடப்பது சாத்தியமல்ல. இன்னும் கால அவகாசம் கொடுக்க வேண்டும். அத்துடன் போரால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் ஐ.நா., அலுவலகம் மாற்று இடத்திற்கு செல்லுமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கையால் இஸ்ரேல் முழு அளவில் தரை வழி தாக்குதலை தொடங்கும் என அஞ்சப்படுகிறது. இது பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம் என ஐ.நா., கவலை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News