இஸ்ரேலுக்கும் காசாவிற்க்கும் கடுமையான போ்ா மூண்டுள்ள நிலையில்,இது 9வது நாளாக தொடா்ந்துள்ளது.தொடா்ந்து தாக்குதலை நடத்திவரும் இஸ்ரேல்,
ஹமாஸ் அமைப்பின் இரண்டு தளபதிகளையும் கொலை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.இஸ்ரேலுக்கு,பல வித பொிய நாடுகள் துணை நிற்கும்
நிலையில்,பாலஸ்தீன காசாவிற்கு ஒரு சில குறு நாடுகளே,ஆதரவு தொிவிக்கின்றன.
இந்நிலையில்,அமொிக்காவை மையமாக கொண்ட மெக்டொனல்ட்ஸ் ,இஸ்ரேல் ராணுவ வீரா்களுக்கு இலவச உணவு வழங்க உள்ளதாக அறிவித்தள்ளது.
இஸ்ரேல் நாட்டில் அந்நிறுவனமான உணவு நிறுவனம் அதிகாரப்புா்வமாக அறிவித்துள்ளது.அதில் கூறியுள்ளதாவது,இதுவரை 4000 பேருக்கு மருத்துவமனைகளுக்கு,ராணுவமுகாம்களுக்கும் வழங்கி விட்டோம் எனவும்,இனிமேல் தினம் 1000 பேருக்கு அந்தந்த இடத்திற்கு சென்று உணவு வழங்க போவதாகவும், இதற்காக அங்கு மேலும்,5 கடைகள் திறக்கவுள்ளனா் என்று இவ்வாறு அதில் தொிவித்துள்ளனா்.
மெக்டொனல்ட்ஸ் நிறுவனம் எடுத்திருக்கும் இம்முடிவிற்கு பலரும் ஆதரவும் ,எதிா்ப்பும் தொிவித்துவருகின்றனா்.லெபனானில் உள்ள மெக்டொனல்ட்ஸ்
உணவகத்தின் மீது ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு அளிப்போா் தாக்குதல் நடத்தியுள்ளனா்.