தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஷால். 46 வயதாகியும் இவர், இன்னும் திருமணம் செய்யாமலே இருந்து வருகிறார்.
இவ்வாறு இருக்க, நடிகர் விஷால், பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அதில், திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்றும், அதனை மிகவும் பொறுப்புடன் கையாள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தனக்கு சில கடமைகள் உள்ளது என்றும், அந்த கடமைகள் அனைத்தும் முடிந்த பிறகு, திருமணம் நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தால், அது என் வாழ்க்கையில் நிச்சயமாக நடக்கும் என்று கூறியுள்ளார்.