தமிழகத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கு அதிகாலை காட்சி ஒதுக்கப்படுவதை, தமிழ அரசு சமீபத்தில் தடை செய்திருந்தது. இதனால், சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
இதேபோல், தற்போது வெளியாக உள்ள லியோ படத்திற்கும், தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால், லியோ படக்குழுவினர் உயர்நீதிமன்றத்தில், நேற்று வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பில், லியோ படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், 4 மணி காட்சிக்கு பதிலாக, 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி மனுதாக்கல் செய்யுங்கள் என்று, படக்குழுவினருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
இந்த வழக்கில், நீதிமன்றத்தில் நடந்த வாதங்களின் முழு விவரம் பின்வருமாறு:-
ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என மதுரையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் ஆவணங்கள் இன்னும் சென்னக்கு வரவில்லை : பட தயாரிப்பு
4 மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கல்கள் உள்ளன. 4 மற்றும் 7 காட்சிகளுக்கு எந்த படத்திற்கும் அனுமதியளிக்கவில்லை : அரசு வழக்கறிஞர்
5 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கிறீர்கள். அதனை செயல்படுத்த அனுமதிக்க வேண்டாமா? : நீதிபதி
20 நிமிடங்களுக்கு இடைவெளி விட வேண்டுமென்ற எந்த கட்டாயமும் இல்லை : அரசு வழக்கறிஞர்
9 மணிக்கு காட்சிகளை தொடங்க வேண்டும் என்பது தான் அரசு வகுத்துள்ள விதி. அதனை மீற முடியாது : அரசு வழக்கறிஞர்
இடைவெளி நேரத்தை குறைத்துக்கொள்கிறோம் என பட தயாரிப்பு நிறுவனம் கூற முடியாது. அதனை தியேட்டர் நிர்வாகம் தான் கூற முடியும் ; அரசு வழக்கறிஞர்
கடந்த முறை ஒரு படத்திற்கு 4 மணி காட்சிக்கு சென்ற ரசிகர் உயிரிழந்தார். சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளது. அதனை நாங்கள் பார்க்க வேண்டும் : அரசு வழக்கறிஞர்
லியோ படத்தின் ட்ரைலர் வெளியிட்ட போது தியேட்டர் சேதப்படுத்தப்பட்டது : அரசு வழக்கறிஞர்
7 மணி காட்சிக்கு கூட அனுமதியில்லை என்றால் ஒரு நாளைக்கு 5 காட்சிகளுக்கு எதற்கு அனுமதியளிக்கிறீர்கள்?. 5 காட்சிகளுக்கு அனுமதி அளித்ததால் தானே தற்போது அவர்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்கிறார்கள் : நீதிபதி கேள்வி
விதிவிலக்கு அளிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. அதன்படி எங்களுக்கு விலக்கு அளிக்கலாம் : பட தயாரிப்பு நிறுவனம்
சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தான் விலக்கு அளிக்க முடியும். சாதாரண நாட்களில் அளிக்க முடியாது : அரசு தரப்பு
அனைத்து படங்களுக்கும் 5 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கிறோம் : அரசு தரப்பு
இடைவெளி நேரத்தை குறைத்தை 5 காட்சிகள் திரையிட முடியுமா? என ஆலோசித்து சொல்கிறோம் : அரசு
அவ்வாறு செய்வதாக இருந்தால் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது : நீதிபதி
850 திரைகளில் படத்தை வெளியிடுவதாக கூறுகிறீர்கள். எவ்வளவு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். அதை எல்லாம் நினைத்து பார்க்க வேண்டும் : நீதிபதி
லியோ படம் 2.45 நிமிடங்கள் நீளம் என தெரிந்திருந்தால் 5 காட்சிகளுக்கு அனுமதி அளித்திருக்க மாட்டோம். ; அரசு தரப்பு
இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து ஆராய்ந்து அனுமதி அளித்ததாக கூறியிருக்கிறீர்கள். ஆனால் இயந்திர தனமாக அனுமதி அளித்திருக்கிறீர்கள் : நீதிபதி
4 மணி ரசிகர்கள் காட்சிக்கு தான் அனுமதி கேட்கிறோம். : பட தயாரிப்பு நிறுவனம்
அப்போது குறுக்கிட்ட நீதிபதி அனைத்து காட்சிகளும் ரசிகர்களுக்காகதானே திரையிடப்படுகிறது என நீதிபதி கூறியதும் நீதிமன்றத்தில் சிரிப்பலை