மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில், சிவகார்த்திகேயனும், இசையமைப்பாளர் டி.இமானும் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள்.
ஆனால், சமீப காலங்களாக, இருவரும் எந்தவொரு திரைப்படத்திலும், இணையவில்லை. இவ்வாறு இருக்க, பேட்டி ஒன்றில், இதுகுறித்து இமானிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக தெரிவித்தார்.
மேலும், அந்த துரோகம் என்னவென்று வெளியில் சொல்ல முடியாது என்றும், இனி இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்றும், கூறினார். இவரது இந்த பேட்டி, ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.