சிவசேனா என்ற கட்சி இரண்டாக பிரிந்து, உத்தவ் தாக்கரே தலைமையிலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலும் இயங்கி வருகிறது.
இதற்கிடையே, உத்தவ் தாக்கரே 21 சோசலிச கட்சிகளுடன் கூட்டணி வைப்பதாக, கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று அறிவித்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சரும், பிளவுப்பட்ட சிவசேனா கட்சியின் ஒரு பகுதியின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில், கடந்த திங்கள் கிழமை அன்று, பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, பேசிய ஏக்நாத் ஷிண்டே, பிளவுப்பட்ட சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவை கடுமையாக விமர்சித்தார்.
மேலும், 21 சோசியலிச கட்சிகளுடன், உத்தவ் தாக்கரே கூட்டணி வைப்பது, அவருக்கு ஒட்டுபோட்ட மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் கூறினார்.
இதுமட்டுமின்றி, உத்தவ் தாக்கரே, ஓவைசியுடன் கூட, கூட்டணி வைப்பதற்கு தயங்க மாட்டார் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, பணத்தை மட்டும் தான் விரும்புகிறது. அந்த கட்சியின் தலைவர், என்னிடம் 50 கோடி ரூபாய் நன்கொடையாக அளிக்க வேண்டும் என கூறியதாகவும் தெரிவித்தார்.