கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு மாற்றாக புதிய ரூ.500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. சமீபத்தில் ரூ.2000 நோட்டுகளை மட்டும் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது.
இதனால் ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு, ரூ.1000 நோட்டுகள் அச்சிடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், 1000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகம் செய்வது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.