மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் மாதிரி விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் TV-D1 ராக்கெட் மூலம், ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று (அக்.,21) காலை 8 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வானிலை காரணமாக மாதிரி விண்கலம் 8.30 மணிக்கு தாமதமாக செல்லும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காலை 8:45 மணியளவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்ஜினில் கோளாறு
ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த திட்டம் இன்று நடக்க முடியவில்லை. இந்த கோளாறு குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். பின்னர் மீண்டும் 2 மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.