அதிதீவிர புயலாக வலுப்பெற்றது தேஜ் புயல்!

‘தேஜ்’ புயல் வலு பெற்றதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில், இரண்டு புயல் சின்னங்கள் உருவாகியுள்ளன. புயல்களுக்கு, ‘தேஜ்’ மற்றும் ‘ஹாமூன்’ என்ற, பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில், இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளன. அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரே நாளில் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று மாறியுள்ளது. இது மணிக்கு, 7 கி.மீ., வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்கிறது.

தேஜ் புயல் இன்று மாலைக்குள் அதி தீவிர புயலாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெறும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயலுக்கு, இந்தியா வழங்கியுள்ள, தேஜ் என்ற பெயர் சூட்டப்படுகிறது. ஹிந்தி மற்றும் உருது மொழியில், தேஜ் என்றால் வேகம் என்று அர்த்தம்.

RELATED ARTICLES

Recent News