தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இளையராஜாவின் மகனான இவர், இசை உலகில் அசைக்க முடியாதக சக்தியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, சமீபத்தில் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருக்கும் சீன ரசிகர் ஒருவர், யுவனின் பாட்டை அவரிடம் பாடிக் காட்டியுள்ளார்.
அதாவது, பையா படத்தில் இடம்பெற்ற துளிதுளி மழையாய் வந்தாயே என்ற பாடலை பாடிக் காட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.