ஒவ்வொரு கிரிக்கெட் அணியிலும், பேட்ஸ் மேன்கள் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு பந்து வீச்சாளர்களும் மிகவும் முக்கியமானவர்கள்.
ஆனால், பெரும்பாலும், வேகப் பந்து வீச்சாளர்கள் தான், ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் இடம் பிடிப்பது வழக்கம். இவ்வாறு இருக்கும் பட்சத்திலும், தனது சிறப்பான சுழற் பந்துகளை வீசி, பெரும் ரசிகர்களை வைத்திருந்தவர் பிஷன் சிங் பேடி.
இந்தியாவின் சிறப்பான சுழற் பந்து வீச்சாளர்களில் ஒருவரான இவர், கேப்டனாகவும் இருந்துள்ளார். கடந்த 1970-ஆம் ஆண்டு அன்று, பத்மஸ்ரீ விருதை பெற்றிருந்த பிஷன் சிங் பேடி, பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், தனது 77-வது வயதில், உடல்நலக் குறைவு காரணமாக, இயற்கை எய்தினார். இந்த தகவலை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள், தங்களது இரங்கல்களை கூறி வருகின்றனர்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சுழற்பந்து ஜாம்பவானுமான பிஷன் சிங் பேடி உயிரிழந்திருப்பதை அறிந்த மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
இவர், நமது நினைவுகளில் மட்டுமின்றி, கிரிக்கெட் உலகில் அவரது சிறப்பான பந்து வீச்சு மூலமும், நீடித்து வாழ்வார். என்னுடைய இரங்கல்களை, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்”
இவ்வாறு அந்த பதிவில், கூறியுள்ளார்.