Connect with us

வெளியாகும் தளபதி 68 அப்டேட்!போஸ்டா் வெளியிட்டு சத்தியம் செய்த ஏஜிஎஸ் நிறுவனம்!

சினிமா

வெளியாகும் தளபதி 68 அப்டேட்!போஸ்டா் வெளியிட்டு சத்தியம் செய்த ஏஜிஎஸ் நிறுவனம்!

‘லியோ’ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறாா் .தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் குறித்த அப்டேட்டுகள் வெளிவரமால் இருந்த நிலையில், தளபதி 68 தொடர்பான அப்டேட்டுகள் நாளை வெளியாகும் என்று தளபதி 68 என்ற போஸ்டருடன் ஏ.ஜி.எஸ். நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் 2024-ம் ஆண்டு தங்களுக்கான ஒன்றாக இருக்கும் என்றும் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ நாளை மதியம் 12.05 மணிக்கு வெளியாகும் என்று ஏ.ஜி.எஸ். தெரிவித்துள்ளது. இந்த வீடியோவிலேயே படக்குழு மற்றும் நடிகர்கள் யார் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று குஷிகரமான அப்டேட்டை கொடுத்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top