தொடர் விடுமுறையால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிந்துவரும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மும்முரம் காட்டுவார்கள். பின்னர் விடுமுறை முடிந்த பின் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களில் இருந்த மீண்டும் தாங்கள் பணிபுரியும் ஊர்களுக்கு செல்லவார்கள்.
இந்த நிலையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழகம் முழுதும் சுமார் 119 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துறை அதிகாரிகள் சிறைபிடித்ததனர். மேலும், 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை விடுவிக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு;
இன்றுவரை அதிக கட்டணம் புகார் இல்லாமல் இயங்கி வந்த போதிலும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி மற்றும் 4 நாட்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு தவறு செய்யாமல் இயங்கிய 120 ஆம்னி பேருந்துகளை அதிக கட்டணம் என்ற பெயரில் ஆணையரின் தவறான வழிகாட்டுதலின்படி சிறைபிடித்தும், மீண்டும் சிறைபிடிப்பதை நிறுத்த கோரியும் இன்று (அக்.24) மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்து இயங்காது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.