பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான திரைப்படம் லவ் டுடே. இந்த திரைப்படம் வெற்றி பெற்றதற்கு யுவனின் இசையும் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன், கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியிட்ட பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில், யுவன் சங்கர் ராஜா ஒரு தண்டம்.. ஃப்ராடு என்று கண்டபடி திட்டியுள்ளார்.
மேலும், மங்காத்தா படத்தின் BGM, ஆங்கில படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு நேர் மாறாக, தற்போது பிரதீப் ரங்கநாதன் யுவனை பாராட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.