தமிழ் சினிமாவில் 90ஸ்களில் முக்கிய நடிகையாக வலம் வந்தவா் நடிகை குஷ்பு . அவர் நடிகர் பிரபு உடன் சில படங்கள் நடித்தபோது பலவித கிசுகிசுக்கள் சினிமா வட்டாரங்களில் சுற்றிவந்தது.ஆனால்,அதன் பின் இயக்குனர் சுந்தர்.சியை குஷ்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்போது 28 வருடங்களுக்கு முன் சுந்தா் சியும் குஷ்புவும் எடுத்த புகைப்படத்தை குஷ்பு வெளியிட்டுள்ளாா் .
அதில் ஒளிவட்டம், என் தலைக்கு மேலே பிரகாசித்து, இறக்கைகளில் காத்திருப்பதை நான் அறிந்தேன். அவர் பெயர் சுந்தர்.சி.பிப்ரவரி 1995ல் சுந்தர் சி தனக்கு ப்ரோபோசல் செய்த பின் இரண்டு நாட்கள் கழித்து எடுத்த போட்டோ காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது,என்று பதிவிட்டுள்ளாா்.இப்புகைப்படத்திற்கு குஷ்பு ரசிகா்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறனா்.