மத்திய பிரதேச மாநிலத்தில் விஷமற்ற பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதியில் உள்ள பைப்லைனுக்குள் நுழைந்துள்ளது. அங்கிருந்த மக்கள் பாம்பை வெளியே எடுக்கும் முயற்சியில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த தண்ணீரை குழாயில் ஊற்றியுள்ளனர்.
இதனையடுத்து பாம்பு வெளியே வந்தயுடன் சுயநினைவு இழந்து மயங்கிய நிலையில் இருந்துள்ளது.
அப்பகுதியில் உள்ள மக்கள் காவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர் அதுல் சர்மா என்பவர் பாம்பை எடுத்து பரிசோதித்துள்ளார்.
பின்னர் அந்த பாம்பின் வாயில், தனது வாயை வைத்து ஊதி சிகிச்சை அளித்துள்ளார். சிறிது நேரத்திலேயே பாம்பு சுயநினையடைந்து ஊர்ந்து சென்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, அந்த காவலரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுபோன்ற முறச்சிகளை யாரும் எடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.