இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாகவும் , அனு இமானுவேல் கதாநாயகியாகவும் நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளாா். ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து ‘ஜப்பான்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள நிலையில் ,இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த நிகழ்ச்சியில், சூர்யா, ஜெயம் ரவி, விஷால், மணிரத்னம், லோகேஷ் கனகராஜ், எச்.வினோத் மற்றும் இதுவரை கார்த்தி நடித்த படங்களின் இயக்குநர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாயகியுள்ளது.இன்று இரவு 10 மணிக்கு ‘ஜப்பான் படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.