சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
வெங்காயத்தின் விலை கடந்த வாரம் கிலோ 20 ரூபாயாக இருந்த நிலையில் அதன் விலை அதிகரித்து தற்போது 65 ரூபாயாக விற்கப்படுகிறது. அதே போல ஒரு கிலோ பெரிய வெங்காயம் 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தீபாவளி வரையில் இந்த விலை உயர்வு நீடிக்கும் எனவும், அதன் பின் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபரிகள் தெரிவிக்கின்றனர்.
கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வரவேண்டிய வெங்காயத்தின் அளவு கணிசமாக குறைந்ததால் டெல்லியில் வெங்காயத்தின் விலை கிலோ 80 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.