“இது என்னோட தவறுதான்”…லியோ படம் குறித்து வெளிப்படையாக பேசிய லோகேஷ் கனகராஜ்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் கடந்த 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

லியோ திரைப்படத்தின் இரண்டாம் பாதியில், குறிப்பாக பிளாஷ்பேக் காட்சிகளில் சற்று தொய்வு இருப்பதாக ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சென்னையில் நடைபெற்ற ‘ஜப்பான்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ‘லியோ’ திரைப்படத்தின் வசூல் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், டத்தின் இரண்டாம் பாதியில் சற்று தொய்வு இருப்பதாக விமர்சனங்கள் வந்தன. அதை ஏற்றுக்கொள்கிறேன். எனது வேலை அதோடு முடிந்தது. திரைப்படத்தின் வசூலுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை. அதைப் பற்றி தயாரிப்பாளரிடம் தான் கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News