சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, மன்மத லீலை, போர் தொழில் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் அசோக் செல்வன்.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள ப்ளு ஸ்டார், சபா நாயகன் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. இந்நிலையில், இவரது வித்தியாசமான லுக் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த லுக்கில், முடியை மிகவும் குறைவாக வைத்துக் கொண்டு, தாடியை அடர்த்தியாக வைத்துக் கொண்டுள்ளார்.
மேலும், வெள்ளை சட்டையும், ஜீன்ஸ் பேண்டும், கருப்பு நிற கண்ணாடியும் அணிந்துக் கொண்டு, பயங்கர ரக்கட் லுக்கில் உள்ளார். இவரது இந்த வித்தியாசமான லுக்கை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
