கடந்த 10 ஆண்டுகளாக, பாஜக தலைமையிலான அரசு இந்திய நாட்டை ஆண்டு வருகிறது. இந்த அரசின் மீது, எதிர்கட்சிகள் சார்பில் பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த குற்றச்சாட்டுகளில் மிகவும் முக்கியமான ஒன்று என்றால், அது பெகசாஸ் விவாகரம். அதாவது, எதிர்கட்சி தலைவர்களின் செல்போன்கள், பெகாசஸ் என்ற மென்பொருள் மூலமாக, ஒட்டுக் கேட்கப்படுவதாக கூறப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பாஜகவின் முக்கிய தலைவரும், உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞருமான நலின் கோலி, செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது, அவர் பேசியது பின்வருமாறு:-
“மஹுவா மொய்த்ரா மீது, பல்வேறு சீரியசான குற்றச்சாட்டுகள் உள்ளன. அந்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
ஆனால், தற்போது அவர் செல்போன் ஹாக் செய்யப்படுவது தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறார். யாராவது செல்போனை ஹாக் செய்தால், சொல்போனுக்கு நோடிபிகேஷன் வந்துவிடும்.
இந்திய அரசாங்கம் மற்றவர்களின் செல்போன்களை ஒட்டுக் கேட்கிறது என்பதை எந்த அடிப்படையில் அவர் சொல்கிறார். இது கவனத்தை திசை திருப்புவதற்கான செயல்.”
இவ்வாறு கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி ராகவ் சத்தா, தனது செல்போன் ஹாக் செய்யப்படுவதாக, நோடிபிகேஷன் வந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், “ இன்று காலை ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எனக்கு ஒரு நோடிபிகேஷன் வந்தது. அந்த நோடிபிகேஷனில், உங்களது செல்போன் ஹாக் செய்யப்பட்டிருப்பதாக, எச்சரிக்கப்பட்டது.
இது ஒரு தனிப்பட்ட நபர் மீது நடத்தப்பட்ட தாக்குதலே, எதிர்கட்சியை சேர்ந்த நபரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலோ கிடையாது. இந்திய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.
இது என்னுடைய செல்போனை பற்றியதோ, என்னுடைய தகவல்களை பற்றியதோ மட்டும் கிடையாது. இது ஒட்டுமொத்த இந்தியர்களும் கவலைப்பட வேண்டியது. ஏனென்றால், இன்று நான்.. நாளை நீங்களாக கூட இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.