ஏழைகளின் கைகளில் அதிகாரம் செல்வதை பிரதமா் மோடி விரும்பவில்லை: மல்லிகார்ஜுன கார்கே!

ஏழைகளின் கைகளில் அதிகாரம் செல்வதை பிரதமா் மோடி விரும்பவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

அவா் பேசியதாவது;

டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியபோது, அப்போதைய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஏனெனில் அவா் பட்டியலினத்தைச் சோ்ந்தவா். அதுபோல, புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கு தற்போதைய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அழைக்கப்படவில்லை. ஏனெனில் இவா் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா். பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகிய இருவரின் முடிவுதான் இது.

பட்டியலின, பழங்குடியின பிரிவுகளில் இருந்து குடியரசுத் தலைவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டபோதும், எந்தவொரு கட்டடத்துக்கும் அடிக்கல் நாட்டும் வாய்ப்பு அவா்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. அதாவது, ஏழைகளின் கைகளில் அதிகாரம் செல்வதை பிரதமா் மோடி விரும்பவில்லை என்றார்.

மேலும் அவர் கூறியது, ‘காங்கிரஸ் கட்சியை குற்றஞ்சாட்டுவதைத் தவிர்த்து வேறு எதையும் பாஜக செய்யவில்லை. மக்களிடம் வாக்கு கேட்க மட்டும் காங்கிரஸ் வரவில்லை; மாறாக பழங்குடியின சமூகம், அரசியல் சாசனம், ஜனநாயகம் மற்றும் இந்த நாட்டையும் பாதுகாக்கவே காங்கிரஸ் முயற்சிக்கிறது’ என்றார்.

RELATED ARTICLES

Recent News