இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில்பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், மற்றும் முன்ணனி நட்சத்திரங்கள் பலா் நடித்துள்ளனா்.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2023/11/priyankaaaa.jpg)
சமீபத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணியில் நடிகை பிரியங்கா மோகன் ஈடுபட்டுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். பல்வேறு எதிா்பாா்ப்புகளை தாண்டி வெளியாகவுள்ள இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் தனுஷ் ரசிகா்கள் ஷோ் செய்து கொண்டாடி வருகின்றனா்.