Connect with us

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு..!

சினிமா

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு..!

சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் சப்தகிரி நகரை சேர்ந்த முருகன் என்பவர் அண்ணா நகரில் உள்ள சிக்கன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். நேற்று காலை வழக்கம்போல் முருகன் வேலைக்கு சென்ற நிலையில் அவரது மனைவி லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இரவு வேலை முடிந்து முருகன் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து அவரது மனைவி பலத்த காயங்களுடன் மயங்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, லட்சமியின் கணவர் முருகன் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த புழல் போலீஸார் லட்சுமியின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top