டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்,மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் ஆகிய இருவரும் பிரிட்டனில் சமீபத்தில் சந்தித்தனா். எலான் மஸ்க் தனது மகனின் பெயா் குறித்த சில தகவலை தெரிவித்தார் என எக்ஸ் தளத்தில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் பதிவிட்டுள்ளார்.
இது குறித்த பதிவில், “பிரிட்டனில் நடைபெற்ற ஏ.ஐ. பாதுகாப்பு கருத்தரங்கில் யார் கலந்து கொண்டிருக்கிறார் என்று பாருங்கள். எலான் மஸ்க் தனது மகனுக்கு சந்திரசேகர் என்று பெயரிட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தார். 1983-ம் ஆண்டு நோபல் பரிசு வென்ற இயற்பியலாளர் எஸ் சந்திரசேகரை தழுவி இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவுக்கு பதில் அளித்த எலான் மஸ்க் மனைவி ஷிவோன் ஸில்லிஸ், “இது உண்மை தான். நாங்கள் அவனை சுருக்கமாக சேகர் என்று அழைக்கிறோம், ஆனால் இந்த பெயரை சுப்பிரமணியன் சந்திரசேகரின் நினைவாக வைத்திருக்கிறோம்,” என்று குறிப்பிட்சுள்ளார்.