உலக அழகி போட்டி தொடங்கிய நாள் முதல் இன்று வரை, பல்வேறு பெண்கள், அந்த பட்டத்தை பெற்றுவிட்டார்கள். ஆனால், தமிழ் ரசிகர்கள் மத்தியில் இன்று வரை உலக அழகியாக இருப்பது என்னவோ ஐஸ்வர்யா ராய் தான்.
இவருக்கு சமீபத்தில் பிறந்த நாள் வந்தது. இதனையொட்டி, ரசிகர்கள் பலரும் தங்களுக்கு தெரிந்த முறையில், விதவிதமாக வாழ்த்துக்களை கூறி வந்தனர்.
ஆனால், ஐஸ்வர்யா ராயின் கணவரான அபிஷேக் பச்சன், மிகவும் சுமாரான முறையில் வாழ்த்து கூறியிருந்தார்.
அதாவது, ப்ளாக் அன்ட் வொயிட் நிறத்தில் உள்ள ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை பகிர்ந்து, வெறும் இரண்டு வார்த்தையில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று அபிஷேக் பச்சன் கூறியிருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள், உலக அழகியாக இருந்தாலும், இதுதான் நிலை என்று கூறி வருகின்றனர்.