உலகக் கோப்பை போட்டி தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில்,இன்றைய ஆட்டமானது நியூசிலாந்த் பாகிஸ்தான் அணிக்கு இடையே நடைபெற்றது.
ஐசிசி கடந்த புதன்கிழமை வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. அதில் ஒருநாள் போட்டியில் நம்பர் 1 பந்து வீச்சாளராக ஷாகீன் அப்ரிடி அறிவிக்கப்பட்டார். இதனை ஏற்றுகொள்ளமுடியாத அளவில் இன்றைய ஆட்டத்தில் மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளாா்.
இன்று பெங்களூருவில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் 10 ஓவர்களை வீசிய ஷாகீன் அப்ரிடி 90 ரன்களை வாரி வழங்கினார். மேலும், 1 விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் திணறினார். இவரது பந்தை அடித்து ஆடிய நியூசிலாந்து வீரர்கள் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களையும் விளாசினர். இதன் மூலம் உலகக் கோப்பை போட்டி ஒன்றில் அதிக ரன்களை வாரி வழங்கிய பாகிஸ்தான் வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.
நம்பர் 1 பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்ற இரண்டே நாளில், இந்தளவுக்கு மோசமாக பந்துவீசிய அவரை பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.