உலக பிரசித்தி பெற்ற தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆண்டுதோறும் 11 நாட்கள் கொண்டாடப்படும் இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 30ம் தேதி உலகம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனையுடன் கொடியேற்றப்பட்டு துவங்கியது.
இத்திருவிழாவின் 9ஆம் நாளான இன்று, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் உலகம்மன் எழுந்தருளிய திருத்தேரோட்டம் பக்தர்கள் ஆரவாரத்தோடு நடைபெற்றது. அம்மனை காண திரண்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.