பீகார் மாநிலத்தின் முதலமைச்சரும், INDIA கூட்டணியின் மூத்த தலைவருமான நிதிஷ் குமார், அம்மாநில சட்டமன்றத்தில் நேற்று உரையாற்றியிருந்தார்.
அப்போது பேசிய அவர், மக்கள் தொகை கட்டுப்பாட்டில், பெண்கள் பங்கு என்ன என்பது குறித்தும், கல்வியின் பங்கு என்ன என்பது குறித்தும், மிகவும் ஆபாசமான முறையில் பேசினார். இந்த கருத்துக்கு, பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக கட்சியின் சார்பில், இன்று பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பொதுமக்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “INDIA கூட்டணியில் உள்ள பெரிய தலைவர் ஒருவர், கற்பனைக்கும் அப்பால் உள்ள வகையில், தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். அவர்களுக்கு வெட்கமே கிடையாது.
இவரது இந்த பேச்சுக்கு, எதிர்கட்சி தலைவர்களில் ஒருவர் கூட, கண்டனம் தெரிவிக்கவில்லை. அவர்கள் பெண்களை இப்படி தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் பெண்களுக்கு ஏதாவது நல்லது செய்வார்களா? அவர்கள் பெண்களை மதிக்கக் கூடியவர்களா?” என்று அதிரடியாக பேசியுள்ளார்.
இந்த கருத்து, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதற்கு நிதிஷ் குமார் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், “நான் என்னுடைய வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய வார்த்தைகள் காயப்படுத்தியிருந்தால், அதற்கு எனக்கு நானே கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பெண் கல்வியில் அதிக அக்கறை கொண்டவன்.” என்று கூறியுள்ளார்.