வேல்ஸ் ஹாக்கியின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றும் பால் வபாம் (42) என்பவர் அதிகாலை நடைபயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு நிலைகுலைந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் வைத்திருந்த ஸ்மார்ட் வாட்ச் வழியாக அவரது மனைவியை அழைத்துள்ளார். உடனடியாக சம்பவயிடத்திற்கு விரைந்து கணவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
பால் வபால் சோதித்த மருத்துவர்கள் அவரது தமனியில் ஏற்பட்ட அடைப்பால் நிலைகுலைய வேண்டிய சூழல் உருவானதாகத் தெரிவித்தனர்.
நான் உடல்நலத்தின் மீது அக்கறை கொண்டவன். அதனால் மாரடைப்பு ஏற்படாது என நினைத்திருந்தேன். எனக்கும் குடும்பத்திற்கும் இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார் பால் வபாம்.